உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொங்கல்நகரம் அகழாய்வில் அணிகலன்கள் கண்டெடுப்பு

கொங்கல்நகரம் அகழாய்வில் அணிகலன்கள் கண்டெடுப்பு

உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கொங்கல்நகரத்தில், தொல்லியல்மேடு, பெருங்கற்கால சின்னங்களான கல்திட்டை உள்ளிட்டவை அமைந்துள்ளன. மேற்பரப்பு ஆய்வில், பல்வேறு தொல்லியல் சின்னங்களும் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில், அகழாய்வு பணிகளை மேற்கொள்ள, அரசு உத்தரவிட்டு, கடந்த மாதம் பணிகள் துவங்கின.முற்காலத்தில், மக்களின் வாழ்விடமாக கருதப்படும் சோ.அம்மாபட்டி பகுதியில், தற்போது அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, வட்ட சில்லு, கண்ணாடி மணி, தக்களி - நுாற்பு கருவி உள்ளிட்ட தொன்மை வாய்ந்த பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அகழாய்வு பணிகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.அகழாய்வு பணிகள் குறித்து நேற்று செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மாவட்ட கலெக்டர் கிருஸ்துராஜ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது, திட்டப்பணிகள் குறித்து தொல்லியல்துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.அகழாய்வு திட்ட இயக்குனர் காவ்யா கூறுகையில், ''கொங்கல்நகரம் அகழாய்வு திட்டத்தில், சோ.அம்மாபட்டி பகுதியில் பணி நடக்கிறது. பல கட்டங்களாக, கொங்கல்நகரம் மற்றும் சுற்றுப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ