சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்:தாராபுரத்தில், சத்துணவு ஊழியர் சங்கத்தினர், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தக்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் ரத்தினம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பத்மா, துணைத் தலைவர் சந்திரலேகா, மாவட்ட தலைவர் ஜெயந்தி, மாவட்ட ஒன்றிய பொருளாளர் மாரியம்மா முன்னிலை வகித்தனர்.தேர்தல் வாக்குறுதியின்படி சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.