உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி துாய்மை காத்திட குப்பை கூடைகள்

பள்ளி துாய்மை காத்திட குப்பை கூடைகள்

திருப்பூர்:திருப்பூர் ரோட்டரி மெட்டல் டவுன் மற்றும் துப்புரவாளன் அமைப்பு ஆகியன இணைந்து திருப்பூர் மாநகராட்சி, 22வது வார்டு, குமரானந்தபுரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு குப்பை கூடைகளை வழங்கின. பள்ளி வளாகத்தை துாய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில், மாணவர்களிடமிருந்து சேகரமாகும் குப்பைகளை வைத்துக் கொள்ள குப்பை கூடைகள் வழங்கப்பட்டது.திருப்பூர் ரோட்டரி மெட்டல் டவுன் சங்க தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் பரமேஸ்வரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், பத்மாவதி, தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் மற்றும் துப்புரவாளன் அமைப்பினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ