உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காஸ் குழாய் வெடித்து மூதாட்டி படுகாயம்

காஸ் குழாய் வெடித்து மூதாட்டி படுகாயம்

அனுப்பர்பாளையம்:திருப்பூரில் அதானி டோட்டல் காஸ் எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய்கள் ஆங்காங்கே நிலத்தின் அடியில் பதிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருப்பூர் - வாவிபாளையத்தில் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு அருகில் அதானி காஸ் பைப் லைன் செக்கிங் பாயின்ட் உள்ளது. நேற்று காலை, அதில், ஊழியர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதிக அழுத்தம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு உபகரணம், 100 மீ., துாரம் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், வீட்டு முன் அமர்ந்திருந்த சுந்தராம்பாள், 56, என்ற மூதாட்டியின் காலில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தோர் அவரை மீட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இது குறித்து, திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ