உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இசை வழியே இறைவனை உணரலாம்

இசை வழியே இறைவனை உணரலாம்

திருப்பூர் : ''நாதஸ்வரம், தவில் போன்ற தெய்வீக இசையின் வழியே இறைவனை உணரலாம்,'' என, ஆன்மிக சொற்பொழிவாளர் கீதா பேசினார்.திருப்பூர் முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவிலில், திருப்பூர் ரசிகமணி கந்தசாமி நினைவாக, ஆடி அமாவாசை தோறும், சிறப்பு நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று மாலை, இசை நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, 'மங்கல நாதமும் வழிபாடும் 'என்ற தலைப்பில், ஆன்மீக சொற்பொழிவாளர் கீதா பேசுகையில்,''இறைவன் இசை வடிவாக இருக்கிறார்; ஒவ்வொரு தெய்வத்தின் கரங்களில், பல்வகை இசை கருவி இருந்தாலும், நாதஸ்வரம் யார் கையிலும் இல்லை. ஏனெனில், நாதஸ்வரமே இறைவனின் அம்சமாக இருக்கிறது. நாதஸ்வரம், தவில் போன்ற இசையை மங்கள இசை என்கிறோம்; தெய்வீக மங்கள இசை வாயிலாக, இறைவனை உணரலாம். அமைதியாக அமர்ந்து, இசையை கேட்டு ரசித்தால், மனமும், உடலும் உற்சாகத்துடன் இருக்கும்,'' என்றார்.சிறப்பு நாதஸ்வர இசை நிகழ்ச்சியில், திருப்பாம்புரம் சகோதரர்கள் குஞ்சிதபாதம், சேஷகோபாலன் ஆகியோர் நாதஸ்வரம் வாசித்தனர். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான், மன்னார்குடி வாசுதேவன், ராமேஸ்வரம் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் தவில் இன்னிசையும் இடம்பெற்றது. இன்னிசையை, பக்தர்கள் மெய்மறந்து ரசித்தனர்.ஆடி அமாவாசை தோறும், அம்மனை மகிழ்விக்கும் வகையில், ஐந்து ஆண்டுகளாக, இத்தகைய சிறப்பு நாதஸ்வர இன் னிசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை