உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாம்பு கடித்து உயிருக்கு போராடிய 3 வயது குழந்தை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

பாம்பு கடித்து உயிருக்கு போராடிய 3 வயது குழந்தை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

திருப்பூர்;திருப்பூரில், பாம்பு கடித்து உயிருக்கு போராடிய, மூன்று வயது குழந்தையை, திருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் காப்பாற்றினர்.திருப்பூர் பிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் வேதியப்பன்; தொழிலாளி. இவரது, மூன்று வயது மகள் உதயஸ்ரீயை கடந்த, 8ம் தேதி விஷபாம்பு கடித்தது. ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். பின், அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். உயிருக்கு போராடி வந்த குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். முறையான சிகிச்சை அளித்து குழந்தையை மருத்துவ குழுவினர் காப்பாற்றினர். சிறுமியின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களை, சக மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை