உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு ஊழியர்கள் வேண்டுகோள்

அரசு ஊழியர்கள் வேண்டுகோள்

அவிநாசி;தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அவிநாசி தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டக்கிளை தலைவர் சின்னராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கருப்பன், வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்ட கிளை தலைவர் கண்ணன், மாவட்ட இணை செயலாளர் ராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இணை செயலாளர் வெங்கட் நன்றியுரை கூறினார்.ஆர்ப்பாட்டத்தில், செய்து பழைய டென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப் புற நுாலகர்,எம்.ஆர்.பி., செவிலியர் உள்ளிட்டவர்களுக்கு காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி தர வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகள் குறித்து, கோஷமிட்டனர்.l தாராபுரம் வட்டக்கிளை அரசு ஊழியர் சங்கம் சார்பில், தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் தில்லையப்பன் முன்னிலை வகித்தார்.பங்கேற்ற அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !