உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பஸ் - கார் மோதல் தம்பதி பரிதாப பலி

அரசு பஸ் - கார் மோதல் தம்பதி பரிதாப பலி

திருப்பூர்;திருப்பூர் அருகே அரசு பஸ் மோதி காரில் சென்ற தம்பதியர் பலியாயினர்; மகள் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.திருப்பூர், கருவம்பாளையம் தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, 65; இவரது மனைவி சந்திரா, 58; மகள் ஐஸ்வர்யா, 24. இவர்கள், நேற்று மகேஷ்குமார், 21 என்ற டிரைவரின் வாடகை காரில் சென்றுள்ளனர்.மேட்டூரில் இருந்து, நேற்று திருப்பூர் திரும்பிக்கொண்டிருந்தனர். திருப்பூரில் இருந்து, ஈரோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், 'ஓவர்டேக்' செய்யும் போது, கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.ஊத்துக்குளி - விஜயமங்கலம் ரோட்டில், புலவர்பாளையம் அருகே நடந்த விபத்தில், ராமசாமி, சந்திரா ஆகியோர் அதே இடத்தில் இறந்தனர். ஐஸ்வர்யா மற்றும் டிரைவர், பலத்த காயத்துடன், பெருந்துறை ஐ.ஆர்.டி.டி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை