| ADDED : ஜூன் 01, 2024 11:17 PM
திருப்பூர்;'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், தாராபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய காங்கயம்பாளையத்தில், 2000 சவுக்கு மரக்கன்றுகள் நடப்பட்டது.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், இயற்கையை பாதுகாக்கவும், புதிய சமூக காடுகளை உருவாக்கவும், மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகின்றன. கடந்த, ஒன்பது ஆண்டுகளில் 18 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, மாவட்டம் முழுவதும் குறுங்காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.தரிசு நிலத்தில் மரக்கன்றுகள் வளர்த்து, விவசாயிகளுக்கு வருவாய் வழங்கும் வகையிலும் இத்திட்டம் செயல்படுகிறது. விவசாயிகள், காலியாக உள்ள நிலத்தில், பசுமை மரக்கன்றுகளை வளர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.தாராபுரம் அடுத்த பெரிய காங்கயம்பாளையத்தில், சக்திவேல் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 2000 சவுக்கு மற்றும் 60 வேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டன. வெள்ளகோவில் அருகே உள்ள மணலுாரில், ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தில், மாமரம் மற்றும் மகோகனி என, 101 மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், காலியிடத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.