உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொது பயன்பாட்டு மையத்தில் பசுமை பின்ன 376 தேக்கு மரக்கன்று

பொது பயன்பாட்டு மையத்தில் பசுமை பின்ன 376 தேக்கு மரக்கன்று

திருப்பூர் : நாராணாபுரம் 'சிம்கா நிட்டெக்ஸ் கிளஸ்டர் சர்வீஸஸ்' நிறுவன வளாகத்தில், 376 தேக்கு மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மரக்கன்று நடவு துவங்கியுள்ளது. மூன்று லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்குடன், பசுமை பயணம் வேகமெடுத்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மட்டுமல்லாது, பள்ளி, கல்லுாரிகள், தொழிற்சாலைகளும், காலியிடத்தில் மரம் நட்டு வளர்க்க முன்வரலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பருவமழை மழை பெய்து கொண்டிருப்பதால், மரக்கன்று நட்டு வைக்கும் பணியும் பரபரப்பாக மாறியுள்ளது. பல் லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் - சேடபாளையம் அருகே உள்ள நாரணாபுரத்தில், 'சிம்கா நிட்டெக்ஸ் கிளஸ்டர் சர்வீஸ்' நிறுவனம் இயங்கி வருகிறது.மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன், நிட்டிங் பொது பயன்பாட்டு மையமாக செயல்பட துவங்கியுள்ளது. அந்நிறுவன வளாகத்தில், நேற்று மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. வளாகத்தை பசுமையாக்கும் முயற்சியாக, 376 தேக்கு மரக்கன்றுகள் நட்டு வைக்க திட்டமிட்டுள்ளனர்.'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட குழுவினர், சிம்கா நிட்டெக்ஸ் கிளஸ்டர் நிறுவன பிரதிநிதிகள், மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர். காலியாக உள்ள இடங்களில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டக்குழுவை, 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல வாய்ப்புங்க... இனியும் யோசிக்காம, காலியிடத்தில் கற்பக விருட்சத்தை வளர்க்க முன்வரலாமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை