உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வித்ய நேத்ரா பள்ளியில் குரு பூர்ணிமா விழா

வித்ய நேத்ரா பள்ளியில் குரு பூர்ணிமா விழா

உடுமலை;கோமங்கலம்புதுார் வித்ய நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், குரு பூர்ணிமா விழா நடந்தது.இவ்விழாவில் யாக பூஜை நடந்தது. தொடர்ந்து 'குரு இல்லையேல் திருவருள் இல்லை' என்ற தலைப்பில், மாணவர்களுக்கு குருவின் சிறப்பு குறித்து, புராணகதைகள் மற்றும் இதிகாசங்கள் வாயிலாக விளக்கமளிக்கப்பட்டது.தொடர்ந்து குரு பூர்ணிமா கொண்டாடப்படுவதன் நோக்கம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.மாணவர்கள் தங்களின் பெற்றோரின் பாதங்களை சுத்தம் செய்து பாதபூஜை நடத்தி, வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து மாணவர்கள் இறைவழிபாடு செய்தனர்.விழாவில், பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன், பள்ளி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ