உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குருவார பிரதோஷம் சிவாலயங்களில் வழிபாடு

குருவார பிரதோஷம் சிவாலயங்களில் வழிபாடு

திருப்பூர்: ஆடி மாதமான இம்மாதத்தில் தேய் பிறை பிரதோஷம் குரு பகவானுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையான நேற்று வந்தது. இந்த கிழமையன்று வரும் பிரதோஷத்தை குருவார பிரதோஷம் என அழைக்கப்படுகிறது. இது தவிர, ஆக., 17 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பிரதோஷம் சனிக்கிழமையன்று வருகிறது. இதுவும் சிறப்பான பிரதோஷமாகும்.குருவார பிரதோஷமான நேற்று திருப்பூர் விஸ்வேஸ்வரர் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை, 4:00 மணிக்கு மூலவர், அதிகார நந்தி, உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உமா மகேஸ்வரர், கோவில் பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், அபிேஷகபுரம் ஐராதீஸ்வரர், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், லட்சுமி நகரில் உள்ள அண்ணாமலையார் கோவில், ஊத்துக்குளி ரோடு, காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி