உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தள்ளுபடியில் கைத்தறி சேலைகள்

தள்ளுபடியில் கைத்தறி சேலைகள்

கைத்தறித்துறை சார்பில், ஆக., 7ம் தேதி, தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, மாவட்ட தலைநகரங்களில், சிறப்பு கைத்தறி கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கலெக்டர் அலுவலக வளாகத்தில், நாளை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை கண்காட்சி நடைபெறும்.மாவட்டத்தில் உள்ள, 35க்கும் அதிகமான கைத்தறி நெசவாளர் சங்கங்கள் உற்பத்தி செய்யும் சேலை, கோரா காட்டன் சேலை, கோரா சேலை, காட்டன் சேலை, பெட்ஷீட், துண்டு வகைகள், மிதியடி, பட்டு அங்கவஸ்திரங்கள் கண்காட்சியில் இடம் பெறும். கைத்தறி ரகங்களுக்கு 20 சதவீத தள்ளுபடி உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை