உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாலுகா ஆபீஸ் கழிப்பிடத்தில் பரவலாக ஹான்ஸ் பாக்கெட்

தாலுகா ஆபீஸ் கழிப்பிடத்தில் பரவலாக ஹான்ஸ் பாக்கெட்

பல்லடம்:பல்லடம் தாலுகா அலுவலக கழிப்பிடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் கிடப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பல்லடம் தாலுகா அலுவலகத்துக்கு பணிகளுக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தாலுகா ஆபீஸ் வளாகத்துக்குள், அலுவலக பயன்பாட்டுக்கான கழிப்பிடம் உள்ளது. இதனை அவ்வப்போது பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இக்கழிப்பிட வளாகத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை (ஹான்ஸ்) பாக்கெட்டுகளில் சில பயன்படுத்திய பின் வீசப்பட்டுள்ளன.தாலுகா அலுவலக ஊழியர்களை பெரும்பாலும் இந்த கழிப்பறையை பயன்படுத்தி வரும் நிலையில், இங்குள்ளவர்கள் 'ஹான்ஸ்' பயன்படுத்தினார்களா அல்லது பொதுமக்கள் யாரேனும் பயன்படுத்திய பின் வீசி சென்றார்களா என்பது தெரியவில்லை. இருப்பினும், தாலுகா அலுவலக வளாகம் என்பதால், இது சர்ச்சையை ஏற்படுத்துகிறது. எனவே, அதிகாரிகள் இது குறித்து கண்காணிக்க வேண்டியது அவசியம்.---கழிப்பிடத்திற்குள் கிடந்த 'ஹான்ஸ்' பாக்கெட்டுகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை