உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிழற்குடையை ஆக்கிரமிக்கும் குடிமகன்களால் தொல்லை

நிழற்குடையை ஆக்கிரமிக்கும் குடிமகன்களால் தொல்லை

பல்லடம்;பல்லடம் வட்டாரத்தில், சமீப காலமாக, பயணிகள் பொதுமக்கள் பயன்படுத்தும் நிழல் குடைகள் அனைத்தையும் 'குடி'மகன்கள் தங்கள் வசமாக்கி வருகின்றனர். பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்படும் நிழற்குடைகளை இரவு நேரங்களில், 'பார்'களாக பயன்படுத்தும் 'குடி'மகன்கள், மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், நெகிழி பைகள் உள்ளிட்டவற்றை அங்கேயே வீசி செல்கின்றனர். மதுக்கூடமாக காணப்படும் நிழற்குடைகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் முகம் சுளிக்கின்றனர்.இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், பொதுமக்கள் நிழற்குடைகளை தவிர்த்து, மழையிலும், வெயிலிலும் நிற்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. 'குடி'மகன்களின் பிடியில் உள்ள இது போன்ற நிழற்குடைகளை மீட்க வேண்டும். இரவு நேரங்களில் போலீசார் கூடுதல் கண்காணிப்பு மேற்கொண்டு, விதிமீறும் 'குடி'மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.----பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி கிராமத்தில் உள்ள நிழற்குடை, 'பார்' ஆக மாறிய அவலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ