உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காட்சிப்பொருளாக நல வாழ்வு மையம்

காட்சிப்பொருளாக நல வாழ்வு மையம்

திருப்பூர் மாநகராட்சி, 23வது வார்டு, தியாகி பழனிச்சாமி நகரில் மாநகராட்சி சார்பில், நகர்ப்புற நல வாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது.கடந்த ஒன்பது மாதங்கள் முன் திறப்பு விழா நடத்தப்பட்டது. இன்று வரை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.பொதுமக்கள் கூறுகையில், ''சாமுண்டிபுரம், ஓலப்பாளையம், ஜீவா காலனி, இ.பி., காலனி பழனிச்சாமி நகர், வ.உ.சி., நகர், பாரதிதாசன் நகர் மற்றும் சுற்றியுள்ள மக்கள் பயன்படுத்தும் விதமாக கட்டப்பட்ட இந்த மையம், காட்சி பொருளாக உள்ளது. 15 வேலம் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். முதியவர்கள், தாய்மார்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை