உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி வழிகாட்டி

மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி வழிகாட்டி

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி சார்பில், பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடந்தது.திருப்பூர் தெற்கு ரோட்டரி ஹாலில் நடந்த நிகழ்ச்சியில், மேயர் தினேஷ்குமார் முன்னிலையில், கமிஷனர் பவன்குமார் இதை துவக்கி வைத்தார். இதில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்ததாக தேர்வு செய்ய வேண்டிய படிப்புகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.உயர்கல்வி ஆலோசகர் கலைமணி, பல்கலை கழக கல்வி ஆலோசகர் கவுதம், திருப்பூர் ஐ.டி.ஐ., முதல்வர் பிரபு ஆகியோர் பேசினர். பொது தேர்வு முடித்த மாணவர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 15 மாணவர்களுக்கு திருப்பூர் ஐ.டி.ஐ., நிலையத்தில் சேர்க்கை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ