மேலும் செய்திகள்
பங்களாமேடில் வீட்டுமனை பட்டா வழங்கல்
08-Feb-2025
திருப்பூர்:ருத்ராவதி பேரூராட்சியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினர். ருத்ராவதி பேரூராட்சிக்கு உட்பட்ட, 106 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. தொடர்ந்து, குண்டடம் ஒன்றியம் நவனாரி ஊராட்சி, கள்ளிபாளையத்தில், உப்பாறு அணையின் குறுக்கே ரூ.7.57 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும்பணி; கள்ளி பாளையம் முதல் நிராயூர் ரோடு வரை, ரூ.1.33 கோடி மதிப்பீட்டிலும்; மானுார்பாளையம், கருப்பட்டிபாளையம் சாலை முதல் தொட்டியன்துறை வரை, ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் என, ரூ.10.53 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்ட பணிகள் துவக்கிவைக்கப்பட்டன.தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா, திருப்பூர் மாநகராட்சி, 4ம் மண்டல தலைவர் பத்மநாபன், கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
08-Feb-2025