உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனைவி கொலையில் கணவருக்கு 5 ஆண்டு சிறை

மனைவி கொலையில் கணவருக்கு 5 ஆண்டு சிறை

திருப்பூர் : குடும்பத் தகராறில், தாக்கப்பட்ட மனைவி இறந்த விவகாரத்தில், கணவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், ஊதியூரைச் சேர்ந்வர் துரைசாமி, 65. விவசாயி. கடந்த 2019ல் குடும்ப பிரச்னையில் துரைசாமிக்கு, அவர் மனைவி சுப்பாத்தாள் உடன் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அவர் இரும்பு கம்பியால் மனைவியை தாக்கியுள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழந்தார்.ஊதியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து துரைசாமியைக் கைது செய்தனர். இவ்வழக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜரானார். இதில் துரைசாமிக்கு, 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்புக்குப் பின், துரைசாமி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை