மண்ணால் இடையூறுதிருப்பூர், அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி., தியேட்டர் சந்திப்பு சிக்னல் அருகே ரோட்டில் இடையூறாக மண் கொட்டப்பட்டுள்ளது.- வேலு, அவிநாசி ரோடு.குப்பை தேக்கம்திருப்பூர், 55 வது வார்டு, வெள்ளியங்காடு, ஊர்க்கவுண்டர் நகர் டிரான்ஸ்பார்மர் அருகே கொட்டப்பட்டுள்ள குப்பையை அள்ள வேண்டும்.- பழனிசாமி, டி.எஸ்.கே., லே-அவுட். (படம் உண்டு)பல்லடம், கரைப்புதுார் ஊராட்சி, நொச்சிபாளையம் - அல்லாளபுரம் ரோட்டில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். வழிநெடுக குப்பை காணப்படுகிறது.- செல்வராஜ், அல்லாளபுரம். (படம் உண்டு)காத்திருக்கும் ஆபத்துதிருப்பூர், அவிநாசிரோடு, பங்களா ஸ்டாப் பெட்ரோல் பங்க் எதிர்புறம் ரோட்டை விட உயராக உள்ள குடிநீர் குழாயால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழ வாய்ப்புள்ளது.- விஜயன் அண்ணாமலை, பங்களா ஸ்டாப். (படம் உண்டு)சறுக்கும் சாலைஊத்துக்குளி - படியூர் ரோடு, எடக்காடு ஸ்டாப் அருகே புதிய தரைப்பாலம் பணியின் போது சாலை தோண்டப்பட்டது. ஆறு மாதமாகிறது; இன்னமும் சரிசெய்யவில்லை. வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர்.- கோபாலகிருஷ்ணன், படியூர். (படம் உண்டு)திருப்பூர், அவிநாசி ரோடு, அம்மாபாளையம் சிக்னல் சந்திப்பில் சிமென்ட் ரோடு சேதமாகியுள்ளது. சறுக்கும் ஜல்லிக்கற்களால் வாகன ஓட்டிகள் விழுந்து விடுகின்றனர்.- ராஜா, அம்மாபாளையம். (படம் உண்டு)கால்வாய் அடைப்புகொடுவாய், எட்டாவது வார்டு, மகரிஷி நகரில், கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கியுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.- சதீஷ், மகரிஷி நகர். (படம் உண்டு)கிடப்பில் பணிஅவிநாசி பேரூராட்சி, சீனிவாசபுரம், ஜே.ஜே., கார்டனில் ஜல்லிக்கொட்டி ஒரு மாதமாகியும் ரோடு போடாமல், பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.- செந்தில்குமார், சீனிவாசபுரம். (படம் உண்டு)வீணாகும் தண்ணீர்திருமுருகன்பூண்டி, நகராட்சி அலுவலகம் சிக்னல் அருகில் இரண்டு மாதமாக குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமடைந்தும், சரிசெய்யவில்லை.- சுப்ரமணியம், திருமுருகன்பூண்டி. (படம் உண்டு)திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் பாலத்தின் கீழ் கேட்வால்வு, குழாய் உடைந்து, 24 மணி நேரமும் தண்ணீர் வீணாகி, சாலை முழுதும் சேதமாகியுள்ளது. பலமுறை புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்வதே இல்லை.- நடராஜன், தியாகி குமரன் காலனி. (படம் உண்டு)திருப்பூர், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையம் பஸ் ஸ்டாப்பில் கேட்வால்வில் இருந்து, இரவும், பகலும் தண்ணீர் வீணாகி, சாலையே குழியாகி விட்டது.- சத்ரியன், பெரிச்சிபாளையம். (படம் உண்டு)திருப்பூர், உஷா தியேட்டர் அடுத்த, தில்லை நகர் சந்திப்பு சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- சாந்தாமணி, தில்லை நகர். (படம் உண்டு)திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பஸ் ஸ்டாப்பில் குழாய் உடைந்து, பல மாதங்களாக தண்ணீர் வீணாகிறது.- சங்கர், பாளையக்காடு. (படம் உண்டு)தடுப்புகள் சேதம்திருப்பூர், முதல் ரயில்வே கேட் - கொங்கு மெயின் ரோடு சந்திப்பு வளைவில் விபத்தை தடுக்கும் சாலை தடுப்புகள் சேதமாகியுள்ளது. சீரமைக்க வேண்டும்.- ராகவன், கொங்கு மெயின் ரோடு. (படம் உண்டு)ரியாக் ஷன்--------------சீரானது உடைப்புதிருப்பூர் காங்கயம் ரோடு, கனரா வங்கி முன், குழாய் உடைந்து தண்ணீர் வீணானது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டுள்ளது.- ரவிசெல்வம், முதலிபாளையம். (படம் உண்டு)குப்பை அள்ளிட்டாங்க...இடுவம்பாளையம், கிழக்கு மேடு தண்ணீர் டேங்க் அருகே குப்பை, கழிவுகள் தேங்கியிருப்பதாக 'தினமலர்' திருப்பூர் பக்கத்தில் செய்தி வெளியானது. இதனால், குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி விட்டனர்.- செந்தில், இடுவம்பாளையம். (படம் உண்டு)