உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சைமா சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

சைமா சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

திருப்பூர்;திருப்பூர் 'சைமா' சங்கம் சார்பில், தேவாங்கபுரம் பள்ளி அருகே, நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் (சைமா) சார்பில், திருப்பூர் புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே, தேவாங்கபுரம் பள்ளி முன்பாக, நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. சங்க தலைவர் ஈஸ்வரன், நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினர்.பொதுசெயலாளர் கோவிந்தப்பன், துணை தலைவர் பாலசந்தர், பொருளாளர் சுரேஷ்குமார், நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். நீர்மோர் பந்தலில், ஒரு மாத காலத்துக்கு, தினமும், 1,500 நபர்களுக்கு நீர்மோர் வழங்கப்படும் என, நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ