உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்கம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்கம்

உடுமலை;உடுமலை கோட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவங்கியுள்ளது.கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய்நோயாக இருக்கும் கோமாரி நோய் பாதிப்பிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க, தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.இந்த நோய் பாதிப்பால், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது, சினை பிடிப்பு தடைபடுவது, எருதுகளின் வேலைத்திறன் குறைவதும், இளங்கன்றுகளில் அதிக உயிரிழப்பும் ஏற்படுகிறது.உடுமலை கோட்டத்தில், ஐந்தாவது சுற்றாக கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று முன்தினம் முதல் துவங்கி 21 நாட்களுக்கு நடக்கிறது.மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட பெங்களூரு கிராமத்தில் நடந்த தடுப்பூசி முகாமினை, உடுமலை கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ஜெயராம் ஆய்வு செய்தார். கால்நடை மருத்துவர்கள் ஹரிபிரசாத், கண்ணன், தண்டபாணி மற்றும் மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.உடுமலை கோட்டத்தில், 63 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் மற்றும் செயற்கை முறை கருவூட்டாளர் உள்ளிட்டோர் கொண்ட, 22 குழுக்கள் அமைக்கப்பட்டு முகாம் நடக்கிறது.கால்நடை வளர்ப்போர் தவறாமல் முகாமை பயன்படுத்திக்கொள்ள, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை