மேலும் செய்திகள்
170 சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
1 hour(s) ago
நடுரோட்டில் அச்சுறுத்தும் மின் கம்பங்கள்
19-Dec-2025
திருமூர்த்திமலை கோவில் அருவிக்கு செல்ல அனுமதி
19-Dec-2025
திருப்பூர்;புதுமைப்பெண் திட்டத்தில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்து முடித்து, உயர்கல்வியில் சேரும் மாணவியருக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு 2024 - 25ம் கல்வியாண்டு முதல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழி கல்வியில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவியரும் உதவித்தொகை பெறும் வகையில், புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 7,709 மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உயர்கல்விக்குச் செல்லும் அம்மாணவியர், புதுமைப்பெண் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
1 hour(s) ago
19-Dec-2025
19-Dec-2025