உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விமானப்படையில் சேர விருப்பமா?

விமானப்படையில் சேர விருப்பமா?

இந்திய விமானப்படையால் நடத்தப்படும் அக்னிவீர் வாயு தேர்வு, வரும் அக்டோபர் 18ம் தேதி இணையதளம் வழியாக நடைபெற உள்ளது. தேர்வில் பங்கேற்க, https://agnipathvayu.cdac.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் 28ம் தேதி, விண்ணப்பிக்க கடைசிநாள்.கடந்த 2004, ஜூலை 3ம் தேதி முதல் 2008, ஜனவரி 3ம் தேதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணம், 550 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., செலுத்தவேண்டும். பிளஸ்2 அல்லது மூன்று ஆண்டுகள் பட்டய படிப்பு, தொழில் படிப்பு முடித்திருக்கவேண்டும். விமானப்படையில் பணிபுரிய விருப்பமுள்ளோர் தேர்வில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தை பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி