உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சர்வதேச யோகா தினம் ராஜயோக தியானம்

சர்வதேச யோகா தினம் ராஜயோக தியானம்

உடுமலை:உடுமலை பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலத்தின் சார்பில், ராஜயோக தியான பயிற்சி நிகழ்ச்சி நடந்தது.சர்வதேச யோகா தினத்தையொட்டி, உடுமலை பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில் சிறப்பு யோகா மற்றும் தியான பயிற்சி வழங்கப்பட்டது. உடுமலை முருகன் கலையரங்கில் இப்பயிற்சி வகுப்பு நடந்தது.முதலில் உடற்பயிற்சியும், தொடர்ந்து தியான நிகழ்ச்சி நடந்தது. பயிற்சியாளர் கனகராஜ் உடற்பயிற்சி செய்யும் முறைகள் குறித்தும் விளக்கமளித்தார்.உடுமலை, மடத்துக்குளம் வட்ட பிரம்மாகுமாரிகள் அமைப்பின் பொறுப்பு சகோதரி மீனா ராஜயோக தியான பயிற்சியின் சிறப்புகள் குறித்து, வீடியோ காட்சிகள் வாயிலாக, விளக்கமளித்தார்.நிகழ்ச்சியில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, யோகா பயிற்சிகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை