உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்ட்ராக்ட் கிளப் பள்ளியில் துவக்கம்

இன்ட்ராக்ட் கிளப் பள்ளியில் துவக்கம்

உடுமலை;பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், இன்ட்ராக்ட் கிளப் துவக்க விழா நடந்தது.விழாவுக்கு பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் செந்தில் குமார் தலைமை வகித்தார். இன்ட்ராக்ட் செயலாளர் சரவணன் வரவேற்றார். தேஜஸ் ரோட்டரி கிளப் தலைவர் குருசாமி முன்னிலை வகித்தார்.சங்க நிர்வாகிகள் மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினர். பள்ளி இன்ட்ராக்ட் கிளப் தலைவராக லோகேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேஜஸ் ரோட்டரி கிளப் சார்பில், டியூப் லைட்கள் வகுப்பறைகளுக்கு வழங்கப்பட்டன. செயலாளர் தேவிப்ரியா நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ