ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுப்பு
திருப்பூர்; இன்று ேஹாலி பண்டிகை கொண்டாப்பட்ட உள்ள நிலையில், நேற்றுமுன்தினமும், நேற்றும் வடமாநில ரயில்களில் கூட்டம் அதிகரித்தது. ரயில்களில் ஏறி, இடம் பிடிக்க பயணிகள் முண்டியடித்தனர்.வடமாநிலத்தவரின் பிரசித்தி பெற்ற பண்டிகைகளில் ஒன்றாக ஹோலி பண்டிகை இன்று விமரிசையாக நாடுமுழுதும் கொண்டாடப்படுகிறது. தங்கள் சொந்த மாநிலத்தில் ேஹாலி கொண்டாட ஒரு வாரமாக வடமாநிலத்தவர் ரயில்களில் பயணித்து வருகின்றனர். நாளை ேஹாலி என்பதால், நேற்று நாள் முழுதும் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன், பிளாட்பார்ம், டிக்கெட் கவுன்டர் எங்கு திரும்பினாலும், வடமாநில மக்களே தென்பட்டனர்.நேற்று திருப்பூர் வந்த திருவனந்தபுரம் - கோரக்பூர், திருவனந்தபுரம் - சில்சார் அரோனை எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - டாடா நகர், எர்ணாகுளம் - பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு பெட்டிகள் நிறைந்திருந்தது. உடனடி டிக்கெட் பெற்று பொது பயணிகள் இப்பெட்டிகளில் பயணித்தனர்.வடமாநிலத்தவர் கூட்டம் அதிகரிப்பால், ரயில்வே ஸ்டேஷன் நிறைந்து காணப்பட்டது. கடந்த, 2 நாளில் மட்டும், 10 ஆயிரம் வடமாநிலத்தவர் அவரவர் மாநிலத்துக்கு ேஹாலி பண்டிகைக்கு பயணமாகியிருப்பர் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.