உடுமலை;வீர, தீர செயல்களில் ஈடுபட்டு, உயிர்களை காப்பாற்றிய நபர்கள், 'ஜீவன் ரக் ஷா பதக்' விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.பல்வேறு வீர, தீர செயல்களை செய்து சாதனை புரிபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கும் இதற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது.இது குறித்து, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசின் உள்துறை சார்பில், வீர தீர செயல்கள் மற்றும் மனிதாபிமான பணிகளை செய்து, உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்ட வருக்கு விருது வழங்கப்படுகிறது.சர்வோத்தம் ஜீவன் ரக் ஷா பதக், உத்தம் ஜீவன் ரக் ஷா பதக் மற்றும் ஜீவன் ரக் ஷா பதக் என, மூன்று பிரிவுகளில் விருது வழங்கப் படுகிறது.நீரில் மூழ்குவது, தீவிபத்து, மின் கசிவு, விபத்து, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல், சுரங்கம் மீட்பு நடவடிக்கையின் போது, வீர தீரமாக செயல்பட்டு, ஒரு நபரின் உயிரை காப்பாற்றிய நபர்களுக்கு, 2024ம் ஆண்டுக்கான ஜீவன் ரக் ஷா பதக் வழங்கப்படுகிறது.விருதுக்கு தகுதியான நபர்கள், www.padmaawards.gov.inஎன்ற இணைய தளம் வாயிலாகவோ, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம் வாயிலாகவோ, அடுத்த மாதம், 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். அடுத்தாண்டு, குடியரசு தினத்தன்று, விருதுகள் வழங்கப்படும்.இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.இது சம்பந்தமாக தகுதியானவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.