உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட தடகளம் பங்கேற்க அழைப்பு 

மாவட்ட தடகளம் பங்கேற்க அழைப்பு 

திருப்பூர் : தமிழ்நாடு மாநில தடகள சங்க துணைத்தலைவர், மாவட்ட தடகள சங்க தலைவர், சண்முகசுந்தரம் அறிக்கை:ஆக., 18ம் தேதி, ஆறாவது திருப்பூர் மாவட்ட அளவிலான தடகள சாம்பியன்ஷிப் - 2024 போட்டி, அவிநாசி, அணைப்புதுார், டீ பப்ளிக் பள்ளியில் நடக்கிறது. 14, 16, 18 மற்றும், 20 வயது பிரிவினர் பங்கேற்கலாம். அரசு பள்ளி, அரசு கல்லுாரி மாணவர்களுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை.போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ, மாணவியர் gmail.comஎன்ற இமெயில் முகவரியில் 'எக்ஸல் பார்மெட்' முறையில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவுக்கு, கடைசி தேதி, ஆக., 14. மேலும் தகவங்களுக்கு, 75981 82133, 88709 13200, 97861 25453 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இப்போட்டியில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெறுவோர், செப்., 19 முதல், 22 வரை, ஈரோடு, எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் நடக்கும், 38 வது மாநில தடகள போட்டியில் திருப்பூர் மாவட்டம் சார்பாக பங்கேற்க முடியும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை