உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருவீதியுலா வாகனத்துக்கு இப்படி ஒரு நிலையா?

திருவீதியுலா வாகனத்துக்கு இப்படி ஒரு நிலையா?

திருப்பூர்;திருப்பூர், ராயபுரத்தில் உள்ள ஸ்ரீராஜவிநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா கடந்த வாரம் நடந்தது. விழாவில், உற்சவமூர்த்திகள் திருவீதியுலா சென்றுவர, ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி - ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் இருந்து, சுவாமி திருவீதியுலா செல்லும் வாகனம் எடுத்துச்செல்லப்பட்டது.கும்பாபிேஷக நாளில், மாலையில் உற்சவமூர்த்திகள் திருவீதியுலா விமரிசையாக நடந்தது. பின், வாகனங்களை உரிய கோவில்கள் வசம் ஒப்படைக்கவில்லை. மாறாக, இரும்பு தடுப்புகளை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனம் போல் பயன்படுத்தப்படுவதாக, பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிட்டு, இனிவரும் நாட்களில் இத்தகைய விதிமீறல்கள் நடப்பதை தடுக்க வேண்டும் என்கின்றனர் பக்தர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை