உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஈஸ்வரன் கோவில் பாலம் கட்டுமானம் மும்முரம்

ஈஸ்வரன் கோவில் பாலம் கட்டுமானம் மும்முரம்

திருப்பூர்;நொய்யல் ஆற்றின் குறுக்கில் பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நொய்யல் ஆற்றின் குறுக்கில் இரு இடங்களிலும், ஜம்மனை மற்றும் சங்கிலிப்பள்ளம் ஓடைகளின் குறுக்கிலும் உயர்மட்டப் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மூலம் இப்பாலங்கள் கட்டப்படுகிறது.இதில், ஈஸ்வரன் கோவில் வீதியையும், யூனியன் மில் ரோட்டையும் இணைக்கும் வகையிலான பாலம், ஈஸ்வரன் கோவில் பழைய பாலம் பகுதியில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இதற்காக பாலம் கட்டுமானம் மேற்கொண்ட இடத்தில் தண்ணீர் கடந்து செல்லாமல் தடுப்பு ஏற்படுத்தி துாண்கள் அமைக்கும் பணி துவங்கியது.பாலம் கட்டும் பணி துவங்கியது முதல் மூன்று முறை நொய்யலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், பணிகள் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கியது. வெள்ளம் வடிந்த பின், பணி துவங்கப்பட்டு துாண்கள் அமைக்கும் பணி நடந்தது. தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால், கட்டுமானப் பணி மீண்டும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஆற்றில் தண்ணீரின் போக்கு திருப்பி விட்டு பணிகள் நடந்த நிலையில், வடக்கு பகுதியில் துாண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்டமாக தெற்கு பகுதியில் பணிகள் துவங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை