உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜமாத் நிர்வாகிகள் மகாசபை

ஜமாத் நிர்வாகிகள் மகாசபை

திருப்பூர் : மங்கலம், அக்ரஹாரப்புத்துார், லப்பை சுன்னத் ஜமாத் மஸ்ஜித் நிர்வாகிகள் மகாசபை மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடந்தது. புகாரி தலைமை வகித்தார். வரவு, செலவு கணக்கு சரி பார்க்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வகையில், லப்பை சுன்னத் ஜமாத் மஸ்ஜித்துக்கு, தலைவராக பஷீர்அகமது, செயலாளராக சபியூர் ரஹ்மான், பொருளாளராக முசாபிர் அஹமத் முத்தவல்லி, துணைத்தலைவர்களாக அகமதுஷா, அபுதாகீர் உள்ளிட்ட, 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ