உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வழக்கறிஞருக்கு மிரட்டல் விடுத்த ஜூனியர் வழக்கறிஞர் சஸ்பெண்ட்

வழக்கறிஞருக்கு மிரட்டல் விடுத்த ஜூனியர் வழக்கறிஞர் சஸ்பெண்ட்

திருப்பூர்:திருப்பூரில் சீனியர் வழக்கறிஞருக்கு போனில் மிரட்டல் விடுத்த வழக்கறிஞரை, ஒழுங்கு நடவடிக்கை குழு ஆறு மாதம் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.திருப்பூர், மங்கலம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி, 59. திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். கடந்தாண்டு பிப்., மாதம் முத்தணம்பாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ் என்பவர், இவரை மொபைல்போனில் தொடர்பு கொண்டு, ஒரு வழக்கு தொடர்பாக, கடுமையாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.இது குறித்து, திருப்பூர் சென்ட்ரல் போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கும் புகார் அளிக்கப்பட்டது.ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் பிரிசில்லா பாண்டியன், உறுப்பினர்கள் கதிரவன், முத்துக்குமார் அடங்கிய குழு விசாரித்தது. விசாரணை முடிவில், சுரேஷுக்கு ஆறு மாதம் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டது.மேலும், பார் கவுன்சிலில் அவரது பதிவு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையை ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை