உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காங்கயம் - வெள்ளகோவிலில் குறுமைய போட்டி ஆலோசனை 

காங்கயம் - வெள்ளகோவிலில் குறுமைய போட்டி ஆலோசனை 

திருப்பூர்:காங்கயம் குறுமைய அளவிலான தனிநபர், குழு விளையாட்டு போட்டி நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம், வெள்ளகோவில், அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் பேசுகையில்,' விளையாட்டு போட்டிகளுக்கான விதிகளை, போட்டி துவங்கும் முன்பாக வீரர், வீராங்கனைகளுக்கு தெளிவாக விளக்க வேண்டும். போட்டி நடக்கும் மைதானத்தில் ஆம்புலன்ஸ் பாதுகாப்பு, குடிநீர் வசதி, நிழலுக்கு சாமியானா பந்தல் உள்ளிட்டவை இருப்பதை போட்டி நடத்தும் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்,' என்றார்.முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் தலைமை வகித்தார். வெள்ளகோவில், காங்கயம் வட்டார அரசு, தனியார் பள்ளி உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆக., முதல் வாரத்தில் குறுமைய போட்டிகளை துவங்க முடிவெடுக்கப்பட்டது. பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை