உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / யோகா கல்லுாரியில் கார்கில் தின நிகழ்வு

யோகா கல்லுாரியில் கார்கில் தின நிகழ்வு

உடுமலை;திருமூர்த்திமலை, பரஞ்ஜோதி யோகா கல்லுாரியில் கார்கில் தினம் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் பரஞ்ஜோதி யோகா கல்லுாரி நிறுவனர் குருமகான் தலைமை வகித்தார். கல்லுாரி பொறுப்பு முதல்வர் சண்முகப்ரியா வரவேற்றார்.சைனிக் பள்ளி நிர்வாக அலுவலர் லெப்டினன்ட் கர்னல் தீபு முன்னிலை வகித்து, கார்கில் போர் குறித்து மாணவர்களுக்கு படவிளக்கத்துடன் விவரித்தார்.உலக சமாதான ஆலய பொதுச்செயலாளர் ஆசிரியர் சுந்தரராமன், கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு, வீர வணக்கம் செலுத்துவது குறித்து, மாணவர்களை வழிநடத்தினார். பேராசிரியர் சிவசுப்ரமணியன் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ