உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வழிப்பறி: வாலிபர் கைது

வழிப்பறி: வாலிபர் கைது

திருப்பூர்: தாராபுரத்தில் தனியாக செல்லும் நபர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவது தொடர்பான புகாரின் பேரில் தனிப்படையினர் சிவகங்கையை சேர்ந்த சுப்பு, 39 என்பவரை கைது செய்தனர். கோபியில் இருந்த அவரை கைது செய்து, மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இவருடன் தொடர்புடைய மகேஸ்வரன், கருப்புராஜா மற்றும் ராஜேஷ் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டது தெரிந்தது. இவர் மீது பல்லடம், சிவகங்கை உள்ளிட்ட பல இடங்களில், 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. குண்டாசில் கைது செய்யப்பட்டது தெரிந்தது.l தாராபுரம், அண்ணா நகரில் உள்ள ஒரு வீடு முன் நிறுத்தியிருந்த டூவீலர், 2ம் தேதி திருடு போனது. தாராபுரம் போலீசார் விசாரித்தனர். தேனியை சேர்ந்த பாண்டிஸ்வரன், 22 என்பவரை கைது செய்து, டூவீலரை போலீசார் மீட்டனர். இவர் மீது ஏராளமான டூவீலர் திருட்டு வழக்கு இருப்பது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை