உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கார்டெக்ஸ் - டெக்ஸ்பிராசஸ் இந்தியா கண்காட்சி; நிட்டிங், பிரின்டிங் அதிநவீன தொழில்நுட்பம் அணிவகுக்கும்!

கார்டெக்ஸ் - டெக்ஸ்பிராசஸ் இந்தியா கண்காட்சி; நிட்டிங், பிரின்டிங் அதிநவீன தொழில்நுட்பம் அணிவகுக்கும்!

திருப்பூர்:'கார்டெக்ஸ் டெக்ஸ் பிராசஸ் இந்தியா' என்ற, ஆடை இயந்திரம் மற்றும் ஜவுளி உற்பத்தி தொடர்பான கண்காட்சி, புதுடில்லியில், ஆக., 1ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்க உள்ளது. துவாரகையில் உள்ள, ய ேஷாபூமி சர்வதேச வர்த்தக கண்காட்சி மையத்தில், இக்கண்காட்சி நடக்க உள்ளது.உயர்தர தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதன் வாயிலாக, இந்திய ஜவுளி மற்றும் ஆடை துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி இக்கண்காட்சி காட்சிப்படுத்துகிறது.

'பிராண்டிங்' நிறுவனங்கள்

இந்தியாவில், டெனிம் ஆடைகளுக்கான பிரத்யேக கண்காட்சியாகவும் இந்த கண்காட்சி அமைந்துள்ளது. காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை நடக்கும் கண்காட்சியில், 600க்கும் அதிகமான பிராண்டிங் நிறுவனங்கள் பங்கேற்கின்றன; 200க்கும் அதிகமான நிறுவனங்கள் ஸ்டால் அமைக்கின்றன.கண்காட்சியில், பின்ன லாடை மற்றும் ஜவுளி உற்பத்திக்கான நவீன இயந்திரங்கள்; டெனிம் பேப்ரிக், புதிய வகை எம்பிராய்டரி மெஷினரி, தற்போதுள்ள இயந்திரங்களை தானியங்கி இயந்திரமாக மாற்றும் 'ஆட்டோமேஷன்' சாப்ட்வேர், 'டிஜிட்டல் டெக்ஸ்டைல் பிரின்டிங்' மெஷின்கள் மற்றும் தொழில்நுட்ப பகிர்வு;'ஸ்கிரீன்' பிரின்டிங் தொழில்நுட்பம், நவீன தையல் மெஷின்கள், தொழில் சார்ந்த உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள், 'பினிஷிங்' மற்றும் 'லாண்டரி' மற்றும் பிராசசிங் நிறுவனங்கள், நவீன நிட்டிங் மெஷின்களும் இடம்பெறுகின்றன.

பட்டுச்சேலை பிரின்டிங்

பின்னலாடை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த ஜவுளிகளுக்கான பிரின்டிங் கண்டுபிடிப்புகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, பட்டு சேலைகளில் 'டிஜிட்டல்' பிரின்ட் செய்வது தொடர்பாகவும், 'பிக்மென்ட்' இங்க் பயன்பாடு குறித்தும் கண்காட்சியில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது.டில்லியில் நடக்க உள்ள 'கார்டெக்ஸ்' கண்காட்சியானது, ஒட்டுமொத்த ஜவுளித்துறை சார்ந்ததாக இருந்தாலும், திருப்பூருக்கான பிரின்டிங் தொழில்நுட்ப பகிர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதன்படி, கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள், திருப்பூர் பின்னலாடை தொழில் சார்ந்த ஒவ்வொரு அமைப்புகளுக்கும், கண்காட்சியில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

புதிய வளர்ச்சியை பார்க்கலாம்

இதுகுறித்து திருப்பூர் 'நிட்பிரின்டர்ஸ்' அசோசியேஷன் தலைவர் ஸ்ரீகாந்திடம் கேட்டபோது, ''டில்லியில் நடக்க உள்ள, 11வது கார்டெக்ஸ் கண்காட்சியில் பங்கேற்க வருமாறு, அழைப்புவிடுத்துள்ளனர். ஆண்டுதோறும் நடக்கும் இக்கண்காட்சியில், சேலைகள் உட்பட அனைத்து வகை துணிகளின் பிரின்டிங் தொழில்நுட்பம் இடம்பெறும். குறிப்பாக, டெனிம் மற்றும் சேலை ரகங்களும் இடம்பெறும். பின்னலாடை உற்பத்தி, நிட்டிங், பிரின்டிங் துறையில் புதிய வளர்ச்சியை இக்கண்காட்சி வாயிலாக அறிய முடியும்,'' என்றார்.திருப்பூர், ஜூலை 14-'கார்டெக்ஸ் டெக்ஸ் பிராசஸ் இந்தியா' என்ற, ஆடை இயந்திரம் மற்றும் ஜவுளி உற்பத்தி தொடர்பான கண்காட்சி, புதுடில்லியில், ஆக., 1 ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்க உள்ளது. துவாரகையில் உள்ள, ய ேஷாபூமி சர்வதேச வர்த்தக கண்காட்சி மையத்தில், இக்கண்காட்சி நடக்க உள்ளது.உயர்தர தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதன் வாயிலாக, இந்திய ஜவுளி மற்றும் ஆடை துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி இக்கண்காட்சி காட்சிப்படுத்துகிறது.

'பிராண்டிங்' நிறுவனங்கள்

இந்தியாவில், டெனிம் ஆடைகளுக்கான பிரத்யேக கண்காட்சியாகவும் இந்த கண்காட்சி அமைந்துள்ளது. காலை, 10:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை நடக்கும் கண்காட்சியில், 600க்கும் அதிகமான பிராண்டிங் நிறுவனங்கள் பங்கேற்கின்றன; 200க்கும் அதிகமான நிறுவனங்கள் ஸ்டால் அமைக்கின்றன.கண்காட்சியில், பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்திக்கான நவீன இயந்திரங்கள்; டெனிம் பேப்ரிக், புதிய வகை எம்பிராய்டரி மெஷினரி, தற்போதுள்ள இயந்திரங்களை தானியங்கி இயந்திரமாக மாற்றும் 'ஆட்டோமேஷன்' சாப்ட்வேர், 'டிஜிட்டல் டெக்ஸ்டைல் பிரின்டிங்' மெஷின்கள் மற்றும் தொழில்நுட்ப பகிர்வு;'ஸ்கிரீன்' பிரின்டிங் தொழில்நுட்பம், நவீன தையல் மெஷின்கள், தொழில் சார்ந்த உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள், 'பினிஷிங்' மற்றும் 'லாண்டரி' மற்றும் பிராசசிங் நிறுவனங்கள், நவீன நிட்டிங் மெஷின்களும் இடம்பெறுகின்றன.

பட்டுச்சேலை பிரின்டிங்

பின்னலாடை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த ஜவுளிகளுக்கான பிரின்டிங் கண்டுபிடிப்புகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, பட்டு சேலைகளில் 'டிஜிட்டல்' பிரின்ட் செய்வது தொடர்பாகவும், 'பிக்மென்ட்' இங்க் பயன்பாடு குறித்தும் கண்காட்சியில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது.டில்லியில் நடக்க உள்ள 'கார்டெக்ஸ்' கண்காட்சியானது, ஒட்டுமொத்த ஜவுளித்துறை சார்ந்ததாக இருந்தாலும், திருப்பூருக்கான பிரின்டிங் தொழில்நுட்ப பகிர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதன்படி, கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள், திருப்பூர் பின்னலாடை தொழில் சார்ந்த ஒவ்வொரு அமைப்புகளுக்கும், கண்காட்சியில் பங்கேற்க வருமாறு அழைப்புவிடுத்துள்ளனர்.

புதிய வளர்ச்சியை பார்க்கலாம்

இதுகுறித்து திருப்பூர் 'நிட்பிரின்டர்ஸ்' அசோசியேஷன் தலைவர் ஸ்ரீகாந்திடம் கேட்டபோது,''டில்லியில் நடக்க உள்ள, 11வது கார்டெக்ஸ் கண்காட்சியில் பங்கேற்க வருமாறு, அழைப்புவிடுத்துள்ளனர். ஆண்டுதோறும் நடக்கும் இக்கண்காட்சியில், சேலைகள் உட்பட அனைத்து வகை துணிகளின் பிரின்டிங் தொழில்நுட்பம் இடம்பெறும். குறிப்பாக, டெனிம் மற்றும் சேலை ரகங்களும் இடம்பெறும். பின்னலாடை உற்பத்தி, நிட்டிங், பிரின்டிங் துறையில் புதிய வளர்ச்சியை இக்கண்காட்சி வாயிலாக அறிய முடியும்,'' என்றார்..............செயற்கை நுாலிழை தொழில்நுட்பம்நுாலில் இருந்து துணியாக மாற்றும் 'நிட்டிங்' பிரிவு, ஆயத்த ஆடை உற்பத்தியில் முக்கியமானது. ஒவ்வொரு ஆண்டும், புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது. சமீபகாலமாக, செயற்கை நுாலிழை துணி உற்பத்தி, சூரத், லுாதியானா பகுதிகளில் அதிகரித்துள்ளது. திருப்பூர், பருத்தி நுால் பின்னல் துணி உற்பத்தியில் முன்னோடியாக இருக்கிறது. டில்லியில் ஆண்டுதோறும் நடக்கும் 'கார்டெக்ஸ்' புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது. திருப்பூர் தொழில்துறையினர், நேரில் சென்று பார்வையிட திட்டமிட்டுள்ளனர்.- கோபிநாத் பழநியப்பன்'நிட்மா' சங்க இணை செயலாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !