உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொச்சுவேலி ரயில்  4 நாட்களுக்கு ரத்து

கொச்சுவேலி ரயில்  4 நாட்களுக்கு ரத்து

திருப்பூர்:கொச்சுவேலி - நிஜாமுதீன் வாராந்திர ரயில் இயக்கம், நான்கு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து டில்லி நிஜாமுதீனுக்கு வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06071) வெள்ளிதோறும் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக ஞாயிறுதோறும் நிஜாமுதீனில் இருந்து கொச்சுவேலிக்கு ரயில் இயங்கியது.இந்நிலையில், தவிர்க்க இயலாத காரணங்களால், கொச்சுவேலியில் இருந்து புறப்படும் ரயில், ஜூன், 7, 14, 21 மற்றும், 28ம் தேதியும், நிஜாமுதீனில் இருந்து புறப்படும் ரயில் ஜூன், 10, 17, 24 மற்றும் ஜூலை, 1ம் தேதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை