உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ வலம்புரி விநாயகருக்கு நாளை கும்பாபிேஷகம்

ஸ்ரீ வலம்புரி விநாயகருக்கு நாளை கும்பாபிேஷகம்

உடுமலை;உடுமலை குருவப்பநாயக்கனுார் ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவிலில், நாளை கும்பாபிேஷகம் நடைபெறுகிறது.உடுமலை அருகே குருவப்பநாயக்கனுாரில், ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று கும்பாபிேஷக விழா விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, முதற்கால யாக பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, நாளை (3ம் தேதி) காலை, 4:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், காலை, 6:00 மணி முதல் 7:00 மணி வரை ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ ஜல விநாயகர், ஸ்ரீ பாலமுருகர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது.இந்நிகழ்ச்சியில், குருவப்பநாயக்கனுார் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், ஊர்ப்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை