உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு :தொழிலாளர் துறை விழிப்புணர்வு

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு :தொழிலாளர் துறை விழிப்புணர்வு

திருப்பூர்:குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம், ஜூன் 12ல் அனுசரிக்கப்படுகிறது; அதனை முன்னிட்டு, தொழிலாளர் துறை அதிகாரிகள் குழு, குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தொடர்பாக ஆய்வு நடத்தியது.மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில், உதவி கமிஷனர் (ஜெயக்குமார்) தலைமையிலான குழுவினர், கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தினர்.ஆய்வின் போது, வளரிளம் பருவ தொழிலாளர் இருப்பது கண்டறியப்பட்டு, மீட்கப்பட்டார். கடைகள் மற்றும் நிறுவனங்களில், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவது குற்றம். ஆபத்தான தொழிற்சாலைகளில், வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்துவதும் குற்றம் என, அறிவுறுத்தப்பட்டது. மேலும், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும், ஸ்டிக்கர் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி