உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மதிப்பெண் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு அளிப்பு

மதிப்பெண் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு அளிப்பு

உடுமலை;பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், பெயர்பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், பெயர் பட்டியலில் திருத்தங்கள் வேண்டி சில பள்ளிகளில் இருந்து கடிதம் வருகிறது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் தேர்வர் பெயர், பிறந்த தேதி, போட்டோ, பெற்றோர் பெயர், பயிற்றுமொழி உள்ளிட்ட விபரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள, ஒரு கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது.தேவையுள்ள மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நகலில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு, தலைமை ஆசிரியர்கள், அதை மாவட்ட தேர்வுத்துறை அலுவலகத்தில், இன்றைக்குள் (12ம் தேதி) ஒப்படைக்க வேண்டும். மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்டு வழங்கிய பின், திருத்தங்கள் கோரி இயக்குநரகத்துக்கு மனுக்கள் அனுப்பக்கூடாது.இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உரிய, விரிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என, தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ