உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:குற்றவியல் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வரும், 8ம் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பும் நடக்கிறது.திருப்பூர் மாவட்டத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் கோர்ட் புறக்கணிப்பு நடத்தினர். மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்புறம் நேற்று காலை அனைத்து வக்கீல் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் கோர்ட் நடவடிக்கையில் பங்கேற்காமல் புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. அதன்பின் வக்கீல் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடந்தது.இதில், வரும் 8ம் தேதி வரை கோர்ட் நடவடிக்கைகளில் பங்கேற்காமல் புறக்கணிப்பது; சம்மேளனம் சார்பில் அழைப்பு விடுக்கப்படும் போராட்டங்களில் பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி