உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு வாபஸ்

வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு வாபஸ்

திருப்பூர்,:மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டத்திருத்தங்களை வாபஸ் பெற வலியுறுத்தி, தமிழகம் மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழுவான, ஜாக் கமிட்டி முடிவின்படி, ஜூலை 1 முதல் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.தற்போது போராட்டத்தை தற்காலிகமாக விலக்கி, இன்று முதல் வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நடந்த கூட்டுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.மேலும், வரும் 28ம் தேதி ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பு மற்றும் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. தேசிய அளவிலான அடுத்த கட்டப் போராட்டம் தமிழகத்தில் நடத்துதல்; நீதிபதி சத்யநாராயணா குழுவிடம் அறிக்கை அளித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !