| ADDED : ஜூலை 08, 2024 10:58 PM
திருப்பூர்:இந்திய மருத்துவ சங்கம் சார்பில், ஆருயிர் ஜீவன் என்ற பெயரில் உயிர்காக்கும் முதலுதவி பயிற்சி விழிப்புணர்வு முகாமை, முதல்வர் ஸ்டாலின் காணொளியில் துவக்கி வைத்தார். இதையொட்டி, இந்திய மருத்துவ சங்கத்தின் டெக்ஸ் சிட்டி கிளை சார்பில், விழிப்புணர்வு பயிற்சி முகாம் திருப்பூர், காந்தி நகர், ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. அஜீஸ் அன்சாரி தலைமை வகித்தார். செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். ஏ.வி.பி., கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன், சங்க மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் பொம்முசாமி, தேசிய செயற்குழு உறுப்பினர் டாக்டர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் பாலமுரளி, பவித்ரா ஆகியோர் பொது இடங்களில் மக்கள் மற்றவர்களுக்கு எப்படி முதலுதவி செய்து உயிரை காப்பற்றலாம் என்ற பயிற்சியை வழங்கினர். துணை தலைவர் ஹரிவீர விஜயகாந்த், ஏ.வி.பி., பள்ளி முதல்வர் டயானா உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.---ஐ.எம்.ஏ., மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் பொம்முசாமிக்கு, ஏ.வி.பி., பள்ளி சேர்மன் கார்த்திகேயன் பாராட்டு தெரிவித்தார்.