| ADDED : ஜூன் 07, 2024 12:28 AM
அனுப்பர்பாளையம்;அனைத்து லயன்ஸ் கிளப் சார்பில், லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி பல்லடம் அடுத்த ஆராக்குளம் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக ப்ரி கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பள்ளியில் மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்பு துவக்க விழா, நேற்று காலை நடைபெற்றது. லயன்ஸ் சங்க நிர்வாகிகள் வினோத், சரவணன், கோபாலகிருஷ்ணன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மாணவர்களை வரவேற்று வகுப்புகளை துவக்கி வைத்தனர்.விழாவில், லயன்ஸ் மாவட்ட கவர்னர் நித்தியானந்தம், துணை கவர்னர்கள் ராஜசேகர், செல்வராஜ், பள்ளி சேர்மன் மெஜஸ்டிக் கந்தசாமி, தாளாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் ஐயப்பா பாலாஜி, நடராஜ், சண்முகம், ஜீவானந்தம், நாச்சிமுத்து, சக்திவேல், ரமேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் கோ பூஜை நடைபெற்றது.