திருப்பூர்;திருப்பூர் அருகே கணபதிபாளையத்தில், எஸ்.எஸ்.ஆர்., ஹவுசிங் மற்றும் புராபர்ட்டீஸ் நிறுவனம் பசுமையான சூழலில் அமைத்துள்ள 'லஷ் கிரீன்' மனைப் பிரிவு பெயர்ப் பலகை மற்றும் அலுவலக திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.எஸ்.எஸ்.ஆர்., ஹவுசிங் மற்றும் புராபர்ட்டீஸ் நிறுவனம் திருப்பூர் பகுதியில் முதன்முறையாக, கணபதிபாளையத்தில், 2.5 ஏக்கர் பரப்பில் வீட்டு மனைகளை 'லஷ் கிரீன்' வில்லாஸ் மற்றும் வில்லா பிளாட்ஸ் என்ற பெயரில் புதிதாக அமைத்துள்ளது. 2 மற்றும்3 படுக்கையறைகளுடன் கூடிய அழகிய வில்லா, 3.5 சென்ட் பரப்பளவு முதல் விற்பனை செய்யப்படுகிறது.இது குறித்து, அதன் நிர்வாகத்தினர் கூறியதாவது:சுற்றுச்சூழல் மாசு இல்லாத சுற்றிலும் பசுமை நிலங்கள் அமைந்த பகுதியில் உள்ளது. கேட்டட் கம்யூனிடி வில்லாக்கள், 24, 30 மற்றும் 33 அடி அகலத்தில் தரமான தார் ரோடு, மனைப்பிரிவு முழுவதும் ஏராளமான பசுமையான மரங்கள், குழாய் இணைப்பு, முறையான வடிகால் அமைப்பு, 24 மணி நேரமும் செக்யூரிட்டி, சிசிடிவி கேமரா, ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் கலெக்டர் அலுவலகம், பல்லடம் பஸ் ஸ்டாண்ட், திருச்சி ரோடு ஆகியன 15 நிமிட பயணத்தில் செல்லலாம். பொங்கலுார் - 12 நிமிடம், திருப்பூர் ரயில் நிலையம் - 22 நிமிட பயணத்தில் அடையலாம். பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மனைகள் அமைந்துள்ளன. இதற்கான புக்கிங் தற்போது நடைபெற்று வருகிறது. துவக்க விழா
நாளை, (25ம் தேதி) காலை 11:00 மணிக்கு திறப்பு விழா நடக்கிறது. நெய்வேலி ஜெயப் பிரியா குரூப்ஸ் நிர்வாக இயக்குநர் ஜெயசங்கர், பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் குழும இயக்குநர் நீலராஜ், மாநக ராட்சி மேயர் தினேஷ் குமார், கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் சோமசுந்தரம் உட்பட பலர் பங்கேற்கின்றனர். வில்லா புக்கிங் விவரங்களுக்கு, 99943 11787 மற்றும் 74492 19999 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.