உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழில் முனைவோருக்கு உதவ மதி சிறகுகள் : ஒருங்கிணைந்த சேவை வழங்க திட்டம்

தொழில் முனைவோருக்கு உதவ மதி சிறகுகள் : ஒருங்கிணைந்த சேவை வழங்க திட்டம்

உடுமலை : திருப்பூர் மாவட்டத்தில் 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தின் கீழ்,சுயதொழில் முனைவோருக்கான பல்வேறு சேவைகளை பெறுவதற்கு,'மதி சிறகுகள்' தொழில் மையத்தை அணுகலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தொழில் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதில், பெண்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி, தொழில் முனைவோருக்கான கடனுதவி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் வழங்கப்படுகின்றன.இத்திட்டத்தின் கீழ், தொழில் முனைவு தொடர்பான பல்வேறு சேவைகளையும் ஒருங்கிணைந்து பெறுவதற்கான 'மதி சிறகுகள் தொழில் மையம்' குறிப்பிட்ட வட்டாரங்களில் செயல்படுகிறது.திருப்பூர் மாவட்டத்திலுள்ள இந்த மையத்தை, தொழில் முனையும் பெண்கள் பயன்படுத்தி சேவை பெறுவதற்கு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த மையத்தில்,தொழில் கருத்துருவாக்கம், அரசுத்துறை திட்டங்கள், வங்கிகளில் கடன் உதவி பெறுவதற்கான வணிகத்திட்டம் தயாரித்தல், தொழில் நடத்துவதற்கான சான்றிதழ்கள் பதிவு, இணக்கம் பெறுதல், திட்டம் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதல், ஆதரவு சந்தைபடுத்துதல், 'பிராண்ட்' ஆதரவு உட்பட பல்வேறு வணிக மேம்பாட்டு ஆதரவு சேவைகளும் இந்த மையத்தில் வழங்கப்படுகிறது.தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு, இ - சேவை, சரக்கு மற்றும் சேவை வரி சேவைகளும் இங்கு வழங்கப்படுகிறது.தொழில் முனைவோராக வேண்டுமென்ற ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தற்போது தொழில் செய்வோர், தொழில் துவங்க திட்டமிட்டுள்ளவர்கள் இந்த மையத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.இந்த மையத்தில் நிறுவன மேம்பாட்டு அலுவலர் ஒருவர், நிறுவன நிதி அலுவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மதி சிறகுகள் தொழில் மையத்தின் சேவைகளை பெற 0421 - 2429904, 63821 11081, 76390 03600 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை