உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 2.80 லட்சம் கால்நடைக்கு கோமாரி நோய் தடுப்பூசி

2.80 லட்சம் கால்நடைக்கு கோமாரி நோய் தடுப்பூசி

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், 2.80 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதனை கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் புகழேந்தி துவக்கி வைத்தார்கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறியதாவது:கிராமப்புறங்களின் வளர்ச்சி என்பது, விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் சார்ந்தே உள்ளது. கால்நடைகளுக்கு, குறிப்பாக கறவை மாடுகளுக்கு ஏற்படும் கோமாரி நோய், கறவை சக்தியை குறைத்துவிடும். கலப்பின மாடுகளை, கால் மற்றும் வாய் கோமாரி நோய் அதிகம் தாக்கி, கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் பால் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும்.நடப்பாண்டு, அடுத்த, 21 நாட்களுக்கு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களிலுள்ள அனைத்து கால்நடைகளுக்கும், கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி