திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த, 15 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். வீட்டில் எப்போதும், மொபைல் போனும் கையுமாக இருந்த சிறுமிக்கு, மூன்று மாதங்கள் முன், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவிடும், 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.சிறுமி தன்னிடம் சிறிய அளவிலான மொபைல் போன் தான் உள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய போனை வாங்கி தரும்படி காதலனிடம் கேட்டார். அதற்கு, 'தன்னிடம் பணம் இல்லை என்றும், நீ பணம் கொண்டு வா, வாங்கி தருகிறேன்' என்று கூறினார்.அரட்டையடிக்க'ஐபோன்' உடனே வீட்டிலிருந்த, 8.5 சவரன் நகையை எடுத்து கொண்டு காதலனை சென்று சிறுமி சந்தித்தார். பின், சிறுவன் தனக்கு தெரிந்த சிலர் மூலம், அந்த நகைகளை அடகு வைத்தார். அதில், கிடைத்த பணத்தில், 42 ஆயிரம் ரூபாயை மட்டும் சிறுமியிடம் கொடுத்து விட்டு, மீதமிருந்த, 2 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாயில், சிறுமிக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கு ஐபோனும், தனக்கு அதிக விலையுள்ள டூவீலர் ஒன்றையும் வாங்கினார். பெற்றோருக்கு தெரியாமல், இருவரும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றி, மீண்டும் வீட்டுக்கு சென்று விட்டனர்.வீட்டிலிருந்த நகை காணாமல் போனது குறித்து பெற்றோருக்கு தெரிய வந்தது. அப்போது, சிறுமியிடம் இருந்த புதிய மொபைல் போனை பார்த்து சந்தேகமடைந்த பெற்றோர் விசாரித்தனர். நகையை எடுத்து சென்று, காதலனிடம் கொடுத்து, அடகு வைத்து மொபைல் போன் வாங்கியதை தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக, 17 வயது சிறுவன் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து திருப்பூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.வழிமாறும் குழந்தைகள்எனவே, பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கி தந்து பெற்றோர் பலரும் 'தங்கள் கடமை முடிந்தது' என்று கருதுகின்றனர். அவர்கள் என்ன செய்கின்றனர். என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அவர்களிடம் நேரம் செலவிடுங்கள், அன்பான வார்த்தைகளை வெளிப்படுத்துங்கள். இதுபோன்று பெற்றோர் செய்ய தவறும் போது, அவர்கள் வழிமாறி செல்கின்றனர். பெற்றோர் முழு விழிப்போடு இருக்க வேண்டும்.