உள்ளூர் செய்திகள்

ம.ம.க., வலியுறுத்தல்

பல்லடம்;பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, ம.ம.க., சார்பில், பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் முஜிபுர் ரகுமான் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அப்துல் கயூம், தலைமை கழகப் பேச்சாளர் அபுசாலிக் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து, 69 பேர் உயிரிழந்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிவாரண தொகையை, போலீசார் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ம.ம.க., நிர்வாகி கள் மற்றும் த.மு.மு.க., நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை